Ananthoo's updates

When all trees have been cut down, when all animals have been hunted, when all waters are polluted, when all air is unsafe to breathe, only then will you discover you cannot eat money. - Cree Prophecy

Saturday, September 17, 2016

my article in tamil- Dinamalar 16th sep 2016


http://www.dinamalar.com/news_detail.asp?id=1607694

மரபணு மாற்றம் !
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்:
கடுகின் காரம் குறையப்போவதில்லை!
பல்வேறு அபாயங்கள் அடங்கிய, ஆரோக்கியத் திற்கு கேடு விளைவிக்கக் கூடிய மரபணு மாற்றப்பட்ட கடுகு, நம் சோற்றிலும் கலக்கக் கூடிய அபாயம் உருவாகி உள்ளது.
இந்த வகை கடுகை சாகுபடி செய்ய அனுமதிப் பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கிறது. தெரிந்து தான் செய்கிறதா... அதற்கு இப்படி வழிகாட்டு பவர்கள் யார்?

வரலாறு:
ரசாயனம் மற்றும் மருந்து தொழிலில் ஈடு பட்டுள்ள, 'பேயர்' என்ற பன்னாட்டு நிறுவனம், உலகளவில், பூச்சிக்கொல்லி சந்தையில் ஒரு பெரும் பங்கை வைத்துள்ளது. இதன் பணபலம் எப்பேர்பட்டது என்றால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பரப்புவதில் முன்னோடியாக இருக்கும், 'மொன்சான்டோ' நிறுவனத்தை, சமீபத்தில், 4.42 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது!

மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இந்த நிறுவனத்திற்கு அவ்வளவு ஆர்வம்.பேயரின் அங்க நிறுவனமான, 'ப்ரோ - அக்ரோ' 2002ல், மரபணு மாற்றப்பட்ட கடுகை இந்தியாவில் அறிமுகம் செய்ய, அரசிடம் விண்ணப்பித்தது. ஆனால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது. காரணம், விதைகளில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் அதில் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

விவசாயிகள், தங்கள் பயிரின் சிறு பகுதியை, அடுத்த போகத்தின் விதைக்காக ஒதுக்குவர். மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் தொழில் நுட்பம் அந்த விதைகளை விளையச் செய்யா மல் தடுத்துவிடும்.எதற்காக... விவசாயி மீண்டும் அதே நிறுவனத்திடம் விதை வாங்க கட்டாயப்படுத்துவதற்காக. மேலும், அந்த நிறுவனத்தின் கடுகில் ஒரு குறிப்பிட்ட களைக் கொல்லியை மட்டும் தாங்கி வளரும் வகை யில் மரபணு மாற்றப்பட்டு இருந்தது.

'க்ளூபோசினேட்' என்ற அந்த களைக்கொல்லி எப்பேர்பட்டது தெரியுமா... தாவரங்கள் அமோனியாவை வெளியேற்ற விடாமல் தடுத்து, அதன் மூலம் சூரிய சக்தியை உள் வாங்க முடியாமல் செய்து, திசு சிதைவு ஏற்படுத்தி, எந்த வகை தாவரமாக இருந்தாலும் கொடூரமாக கொல்லக்கூடியது. மரபணு மாற்றப்பட்ட பயிர் மட்டும் தாங்கும்.

வெறுமனே கொன்றாலும் பரவாயில்லை... இது, 120 நாட்கள் வரை மண்ணிலேயே தங்கும், தெளிக்கப்பட்ட பகுதிகளையும் தாண்டி, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் மூலம் மற்ற பகுதிகளுக்கும் பரவும். அதாவது, அடுத்த போகத்திற்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர் தான் போட முடியும். மற்ற வகை பயிர்களை கொன்றுவிடும். இதுவும், அரசு அனுமதி நிராகரிப்பிற்கு ஒரு காரணம்.

இன்றைய பிரச்னைஇன்று இதே தொழில்நுட்பம் தான், உள்நாட்டு தொழில்நுட்பம் என்ற போர்வையில் அச்சுறுத் துகிறது. டில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், தான் உருவாக்கியதாக, இந்த தொழில்நுட்பத்தை அனுமதிக்கக் கோரி, மத்திய அரசின் மரபணு பொறியியல் மதிப் பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்து உள்ளார்.

இந்த குழு, அந்த மரபணு மாற்றப்பட்ட பயிர் மூலம் ஏற்படக்கூடிய அபாயங்கள் பற்றி ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும்; ஆனால், இந்த ஆய்வு வெளிப்படையாக நடத்தப்படவில்லை. அதன் முடிவுகளும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

அந்த உத்தரவுகளை வெளியிட சொல்லி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் நடக்கவில்லை. இப்போது, பல்வேறு தரப்பினரின் பெரும்
ஆர்ப்பாட்டத்திற்கு பின், 'ஒரு பகுதியை மட்டும் வெளியிடுவோம்' என, மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு, தன் வலைதளத்தில் அறிவித்துள்ளது.

ஆனால், அவற்றை பார்க்க, டில்லியில் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு சென்று, ஒரு படிவத்தை பூர்த்தி செய்த பின், அங்கேயே பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுமாம்;

இவ்வளவு ஒளிவு மறைவுக்கு காரணம் என்ன?

உண்மையில், பல பொய்களாலும் அறிவியல் பூர்வ மான தரவு மோசடிகளாலும், அந்த சோதனை முடிவு கள், ஏற்புடையவையாக ஆக்கப்பட்டு உள் ளன.கடந்த மாதம், மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழுவினரு டன் அதிகாரப்பூர்வமாக சந்தித்து, கேள்விகளையும், கவலைகளையும் முன்வைத்த ஏழு பேர் குழுவில், நானும் ஒருவன்.

அந்த குழுவினர் முன், ஆய்வு தரவுகளில் உள்ள பொய்களையும், மோசடிகளையும் நாங்கள் அம்பலப் படுத்திய போது, அவர்கள் வாயடைத்து போயினர்; ஆனால்,சரியான பதிலளிக்க வில்லை. அந்த குழு வில் இருந்த பலர், அந்த சந்திப்பிற்கு பின், 'இதில் களைக்கொல்லியை தாங்கும் மரபணு இருப்பது தெரியாது.

முதல் நான்கு வருட சோதனைகளுக்கு பின், தாய் மரபீனியும்,தந்தை மரபீனியும் மாற்றப்பட்டது தெரியாது. 'ரிஸ்க் அனாலிசிஸ்' என்னும் பாதுகாப்பு ஆய்வு நடத்தப்படவில்லை என்பது தெரியாது' என்று ஒப்புக்கொண்டனர்.

இதை எதிர்ப்பதால், நாங்கள் உள்நோக்கம் உடைய வர்கள் என்று குற்றம் வேறு சுமத்தப்பட்டு உள்ளது. ஆனால்,எதிர்ப்பது நாங்கள் மட்டுமா? 'பேயர்' பன்னாட்டு நிறுவனத்தின் தாயகமான ஜெர்மனி உட்பட, ஐரோப்பாவில் பல நாடுகள், ஜப்பான் உள்ளிட் டவை எதிர்க்கின்றன.இந்தியாவில், மரபணு பொறியி யல் துறையின் தந்தை என்று அழைக்கப்படும், டாக்டர் புஷ்பா பார்கவாவுமே இதை கடுமை யாக எதிர்க்கிறார்.

எதற்காக எதிர்ப்பு?:விவசாயிகள், நிறுவனங்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு, இந்திய விவசாயத்தின் சுதந்திரமும், அதன் மூலம் நம் இறையாண்மையும் பாதிக்கப்படும் என்பது ஒரு பக்கம்; சுப்ரீம் கோர்ட் டால் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் சிறப்பு உறுப்பினராக நியமிக்கப்பட்ட, டாக்டர் புஷ்பா பார்கவா, தொழில்நுட்ப ரீதியாகவே இதை எதிர்க்கிறார்.
* அவர் முன்வைக்கும் காரணங்கள்:
1. உயிரி பாதுகாப்பு சோதனைகள் போதாது
2. ஆய்வுகளில் ஒழுங்குமுறை சரியில்லை
3. இது இன்னும் நிலையற்ற தொழில்நுட்பம்-
4. ஒருமுறை உயிரில் கலந்து விட்டால் எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இதில் மிக முக்கியமானது, ஒருமுறை உயிரில் கலந்துவிட்டால் மீட்க வழியில்லை என்பது தான். மரபணு மாற்று தொழில்நுட்பம், உயிருடன் உரை யாடும் தொழில்நுட்பம். இவை தன்னை தானா கவே மறுபதிப்பு செய்து கொள்ளக் கூடும். அறிமுகப் படுத்தி விட்டால், அதன் பரவலை தடுக்க முடியாது.

காற்று, தேனீக்கள் மூலம் மரபணு மாற்றப்பட்ட கடுகில் இருந்து மரபணுக்களை இந்தியப் பாரம்பரிய ரகங்களுடன் கலந்தால், அந்த பாரம்பரிய ரகங்கள், நிரந்தரமாக மரபணு மாற்றப்பட்ட ரகங்களாக மாறிவிடும்.

இந்தியாவில், மரபணு மாற்றப்பட்ட பருத்தி அறிமுக மானதில் இருந்து,அந்த பயிரில் இது நடந்துள்ளது. இதை விதை நிறுவனங்களும், பருத்தி விஞ்ஞானி களுமே ஒப்புக்கொண்டுஉள்ளனர்.

கடுகில் களைக்கொல்லி தாங்கு திறனுக்காக நுழைக் கப்பட்டுள்ள பார் மரபணு, இன்னும் உயிரி பாதுகாப்பு சோதனைக்குஉட்படுத்தப்படவில்லை.இந்நிலை யில், இதை அறிமுகப்படுத்த எதற்காக அவசரப்பட வேண்டும்... பன்னாட்டு நிறுவனங்களின் பணபலம் பேசுகிறது என்பதை தவிர வேறு பதில் இல்லை.

வேறு வேறு காரணங்கள்

இந்த தொழில்நுட்பத்தை ஆதரித்து பேசுபவர்கள் முன்வைக்கும் வாதங்கள்:
1. மரபணு மாற்றப்பட்ட பருத்தி மூலம் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
2. கடுகு மகசூல் அதிகரிக்கும்
3. அதன்மூலம் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி குறையும்

முதலாவதாக, மரபணு மாற்றப்பட்ட பருத்தி

Advertisement
தோல்வி என்றே கூற வேண்டும். இது அறிமுக மான நேரத்தில், இதை காய் புழு தாக்காது. அதனால் விவசாயிகளின் இடுபொருள் செலவு குறையும் என்றனர். ஆனால், இன்று இளஞ் சிவப்பு நிற காய் புழுக்கள் இதற்கு அடங்க மறுக்கின்றன; எதற்கும் அடங்க மறுக்கின்றன. இவற்றுக்கு பழைய காய் புழுக்களே பரவாயில்லை என்று தோன்றுகிறது.

இதனாலேயே, 'மொன்சான்டோ' நிறுவனம் இந்த விதைகள் விற்பனை மூலம் பெற்று வந்த ஆதாய உரிமத்தொகையை, மத்திய அரசு குறைத்துள்ளது. கிலோவுக்கு, 360 ரூபாயில் இருந்து, 95 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த ரக பருத்தி, பிரேசில், சீனா போன்ற நாடுகளிலும் பயிரிடப்படுகிறது. அங்குள்ள ஆய்வுகள், இந்த ரக பருத்தியில், பூச்சிக் கொல்லி பயன்பாடு, 20 மடங்கு அல்லது 2,000 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கின்றன.

இதிலுள்ள பாடம், மரபணு மாற்றம் மூலம், இயற்கையை வெல்ல முடியாது என்பது தான்; அதனால், முதல் வாதத்தை ஏற்க முடியாது. இரண்டாவதாக, மரபணு மாற்றப்பட்ட கடுகில், 25 சதவீதம் அதிக மகசூல் கிடைக்குமாம். அதுவும் எப்படி நிரூபித்துள்ளனர்... 40 ஆண்டு களுக்கு முன் புழக்கத்தில் இருந்த கடுகு ரகங்களோடு ஒப்பிட்டுள்ளனர்.

ஆனால், சில பாரம்பரிய யுக்திகளின் மூலமும், செம்மை கடுகு சாகுபடி மூலமும், ஏற்கனவே உள்ள ரகங்களில் மகசூலை, 58ல் இருந்து, 130 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என, மத்திய அரசின் வேளாண்மை ஆராய்ச்சி மைய மான, 'ஐகார்' ஆய்வறிக்கைகளை வெளியிட்டு உள்ளது. அதனால்,இரண்டாவது வாதத்தையும் ஏற்க முடியாது.

மூன்றாவதாக, இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் நுகர்வில், கடுகு எண்ணெயின் பங்கு, 10 சதவீதம் தான். இந்த, 10 சதவீதத்தில், 25 சதவீதம் அதிகரித்து, ஆண்டுக்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் உள்ள எண்ணெய் இறக்குமதியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?

எண்ணெய் இறக்குமதி இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு காரணம், உலக வர்த்தக ஒப்பந் தங்களும், அதை தொடர்ந்து வந்த பாமாயில் சுனாமியும், அரசுகளின் தவறான எண்ணெய் வித்து கொள்கைகளும் தான். அதனால், மூன்றாவது வாதத்தையும் ஏற்க முடியாது.

என்ன செய்யலாம்?
சரி... ஒரு கடுகிற்காக இவ்வளவு கொந்தளிக்க வேண்டுமா என்ற எண்ணம் எழலாம். ஆனால், இது கடுகை பற்றி மட்டும் அல்ல... கடுகு வந்தால் கத்தரிக்காய் வரும், பயறு வரும், பப்பாளி வரும். மரபணு பட்டியலில், 50 பயிர்கள் உள்ளே நுழைய காத்திருக்கின்றன.

இதை தடுக்க வேண்டுமானால், நம் முதல் வருக்கு கடிதம் எழுதி மத்திய அரசுக்கு மரபணு கடுகு மற்றும் எந்த பயிரும் வேண்டாம் என்று தெரிவிக்க சொல்லலாம். அவர்கள், தங்களது தேர்தல் அறிக்கையில் தமது அரசு, மரபணு பயிர்களை அனுமதிக்காது என்று கூறி யிருந்தார். நம் பிரதமருக்கும் இது பற்றி கடிதம் எழுதலாம்.

இது பற்றி மேலும் தகவல் பெற, 044-33124242 என்ற எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' கொடுங்கள்.

- அனந்து -

கட்டுரையாளர்,
பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின்
ஒருங்கிணைப்பாளர்.

0 Comments:

Post a Comment

<< Home